News
கவினும் மணிகண்டனும் வேற லெவல் பண்றாங்க!.. முன்னணி இயக்குனரிடம் இருந்து வந்த பாராட்டு!..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக கவின் மற்றும் மணிகண்டன் இருவரும் உள்ளனர். சினிமாவில் தற்சமயம் குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஹீரோ கிடைப்பது என்பது பஞ்சமாகியுள்ளது.
முன்பெல்லாம் ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்காததால் சத்யராஜ், விஜயகாந்த் மாதிரியான பெரிய ஹீரோக்களை வைத்து கூட சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரித்து வந்தனர். ஆனால் இப்போது பெரிய ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்களை எல்லாம் சின்ன படத்திற்கு அழைக்கவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சின்ன தயாரிப்பாளர்கள் படத்தில் நடிப்பதற்கு தற்சமயம் கவின் மணிகண்டன் மாதிரியான ஹீரோக்கள்தான் தேவையாக இருக்கின்றனர். டாடா திரைப்படம் கவினுக்கும், குட் நைட் திரைப்படம் மணிகண்டனுக்கும் முக்கிய படங்களாக அமைந்தன.
இதுக்குறித்து இயக்குனர் செல்வராகவன் பேசும்போது கவின், மணிகண்டன் இருவருமே சிறந்த நடிகர்கள். இருவருமே எதார்த்தமாக நடிக்கின்றனர். எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை நடிக்க கூடிய திறன் இவர்கள் இருவருக்குமே இருக்கிறது. இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என கூறியுள்ளார் செல்வராகவன்.
