Tamil Cinema News
நல்ல மனைவியை தொலைத்த ஆண்கள்..! திடீரென வீடியோ வெளியிட்ட செல்வராகவன்..!
தொடர்ந்து தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் தனிப்பட்ட வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் செல்வராகவன் முக்கியமானவர். செல்வராகவன் இயக்கும் தனித்துவமான திரைப்படங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.
அவரது திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் மூலமாகதான் செல்வராகவனுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதற்கு பிறகு செல்வராகவனும் அதிக பிரபலமானார்.
ஆனால் சமீபத்தில் அவர் இயக்கிய திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் நடிப்பின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் செல்வராகவன். சமீபத்தில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்திலும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்சமயம் செல்வராகவன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய செல்வராகவன் கூறும்போது நமக்கு பிரச்சனை என்று வரும்போது உண்மையாகவே யாரும் நமக்கு உதவிக்கு வர மாட்டார்கள்.
எதாவது பிரச்சனை என்றால் ஆறுதல் கூறுவதற்காக இந்த மாதிரி ஆட்கள் வருவார்கள். அவர்களது பேச்சை கேட்டு எவ்வளவோ நல்ல கணவன் மனைவிகள் பிரிந்ததை நான் பார்த்துள்ளேன். எனவே நீங்களும் அந்த மாதிரி செய்யாதீர்கள்.
இவ்வாறு கூறியுள்ளார் செல்வராகவன்.