News
விஜய் அஜித்தை விட டி.டி.எப் பெரிய ஆளா.. மறைமுகமாக சொன்ன ஷாலின் சோயா..
Shaalin Zoya: தற்பொழுது சினிமா நடிகைகள், நடிகர்கள் பிரபலமாக வருகிறார்களா என்று பார்த்தால் அவர்கள் எல்லாம் விட தற்பொழுது பேரும், புகழுமாக இருப்பவர்கள் youtube சேனல் வைத்திருப்பவர்கள். யூடியூபில் பல லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் வைத்து, பெரிய அளவிற்கு செலிபிரிட்டியாக மாறி இருக்கிறார்கள் பல யூடியூபர்கள். Youtube சேனல் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரின் திறமைக்கேற்ப ஒவ்வொரு விடயங்களை செய்து வருகிறார்கள். அதன் மூலம் ஒரு சில நபர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு போன்றவையும் கிடைக்கிறது.
அந்த வகையில் youtube சேனல் ஒன்றை நடத்தி எப்பொழுதும் சர்ச்சைகளில் இருப்பவர் தான் டிடிஎஃப் வாசன். டி டி எஃப் வாசன் என்றாலே வழக்குகளும், சர்ச்சைகளும் தான் பெயர். அந்த வகையில் இவரின் மேல் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டும் உள்ளார்.
வாரத்திற்கு ஒருமுறை இவரைப் பற்றிய சர்ச்சை வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இவரின் காதலி ஷாலின் சோயா தற்போது இவரைப் பற்றி கூறியிருக்கும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
ஷாலின் சோயா
இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். மேலும் சிறு வயது முதல் சினிமாவில் நடித்து வரும் ஷாலின் சோயா, தற்பொழுது குக் வித் கோமாளி என்ற தமிழ் சமையல் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.

இவர் பேசும் தமிழை பலர் கிண்டல் செய்தும், பலர் ரசித்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தும் வருகிறார்கள். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டில் உருவாகி இருக்கும் நிலையில், டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் சோயா இவரை பற்றி கூறிய கருத்து ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.
செலிபிரிட்டி டிடிஎஃப் வாசன்
ஷாலின் சோயா பேசும்பொழுது என்னுடைய நண்பர்கள் யாருக்கும் டிடிஎஃப் வாசன் என்றால் யார் என்று தெரியாது. ஆனால் டிடிஎஃப் வாசன் உடன் நாங்கள் இருக்கும் பொழுதெல்லாம் யாராவது ஒருவர் வந்து இவருடன் செல்பி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்பொழுது என் நண்பர்கள் கேட்பார்கள் என்ன வேலை செய்கிறார் என்று, youtube சேனல் வைத்திருக்கிறார் என நான் கூறுவேன். அப்படியானால் நாமும் youtube சேனல் தொடங்கலாம் என கூறி கலாய்ப்பார்கள்.
நான் டிடிஎஃப் வாசன் போன்று ஒரு பெரிய ஆளை பார்த்ததே இல்லை. பெரிய பெரிய செலிபிரிட்டி எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஆனால்டிடிஎஃப் வாசன் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. அவருடன் பழகினால் மட்டுமே அவரைப் பற்றி தெரியும் என கூறி உள்ளார் ஷாலின் சோயா.
