தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனருக்கு அதிக வரவேற்பு வந்துவிட்டாலே அந்த இயக்குனர் மிகவும் பிஸி ஆகிவிடுவார் என கூறலாம். அப்படியாக தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.
தொடர்ந்து நான்கு படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் தளபதி விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். லியோ திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் லோகேஷ் மற்றும் விஜய் காம்போவில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் ஹிட் கொடுத்தது. அதனையடுத்து வெளிவரும் லியோவும் பெரும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய சினிமாவில் பல நடிகர்களுக்கு லோகேஷ் கனகராஜுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்துள்ளது. அதை தெரிவிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில் லோகேஷ் கனகராஜிடம் “தங்களுக்கு நேரம் இருந்தால் நான் நடித்த ஜவான் திரைப்படத்தை தமிழில் பார்த்து அதை பற்றி கூறவும்” என கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் “கண்டிப்பாக, நான் இப்போதே ஜவான் திரைப்படத்திற்கான நேரத்தை ஒதுக்கிவிட்டேன். படத்தை முதல் நாளே பார்க்கிறேன்” என பதிலளித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் ஷாருக்கான் , லோகேஷ் இயக்கத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






