கேஜிஎஃப்2 பார்த்து மிரண்டு போன சங்கர்! – என்ன சொன்னார் தெரியுமா?

கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து கடந்த 2018ல் வெளியான படம் கேஜிஎஃப் சேப்டர் 1. இதன் தேசிய அளவிலான வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தற்போது கேஜிஎஃப் சேப்டர் 2 வெளியானது.

KGF 2
Social Media Bar

கடந்த ஏப்ரல் 14ல் படம் வெளியான நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் பல திரையரங்குகளில் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரூ.1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து படம் பெரும் சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டில் இந்தியாவில் வெளியான படங்களில் அதிகமான வசூல் செய்த படமாக ஆர்.ஆர்.ஆர் சாதனையையும் முறியடித்துள்ளது.

சமீபத்தில் கேஜிஎஃப் சேப்டர் 2 வை பார்த்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் “இறுதியாக கேஜிஎஃப்2 பார்த்துவிட்டேன். கட்டிங் எட்ஜ் ஸ்டைலில் கதை சொல்லுதல், திரைக்கதை & எடிட்டிங். இன்டர்கட் ஆக்‌ஷன் & டயலாக்கை தைரியமாக நகர்த்தியது, அழகாக வேலை செய்தது. யஷ்ஷின் பவர்ஃபுல்லான நடிப்பு சிறப்பாக இருந்தது. பெரியப்பா அனுபவத்தை தந்ததற்கு நன்றி பிரசாந்த் நீல் மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் சங்கர். அவராலேயே படம் பாராட்டப்பட்டுள்ளது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.