Connect with us

விஜய் குறித்து அரசியல் சர்ச்சை கிளப்பிய சந்தானம்.. இதுதான் விஷயமா?

Tamil Cinema News

விஜய் குறித்து அரசியல் சர்ச்சை கிளப்பிய சந்தானம்.. இதுதான் விஷயமா?

Social Media Bar

தமிழில் உள்ள அனைத்து பெரிய நடிகர்களுடனும் காமெடி நடிகராக நடித்து அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கியவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி என்று தமிழ் சினிமாவில் மகா பிரபலமான நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் சந்தானம்.

இந்த நிலையில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது தலைவா திரைப்படத்தில் நான் நடிக்கும் போது ஒரு டயலாக் ஒன்று விஜய்யிடம் கூறுவேன். அரசியலுக்கு வரக்கூடிய அனைத்து தகுதியும் உனக்கு வந்துவிட்டது என்று விஜய்யிடம் கூறுவேன்.

santhanam-new-01

santhanam-new-01

அந்த டயலாக் பிறகு அதிக பிரபலமானது. அதனால் படத்திற்கு பிரச்சனை வந்தது. படத்தின் வெளியீட்டு தேதியே தள்ளி போனது. பிறகு படத்தின் வெளியீடு தாமதமானது.

விஜய்யிடம் ஏன் படம் இவ்வளவு தாமதமாக வெளியாகிறது என்று கேட்டேன். அதற்கு விஜய் நீ பண்ணி விட்ட வேலைதான் என்று நடந்த விஷயங்களை கூறினார். இப்படியாக விஜய்யை அரசியலுடன் தொடர்புபடுத்தி முதன்முதலாக பேசியதே நான்தான் என்று கூறியிருக்கிறார் சந்தானம்.

To Top