Connect with us

குழந்தை பிறந்தப்பிறகும் கூட அப்படியே இருக்காங்க!.. பிரபலமாகும் சாயிஷாவின் குத்தாட்ட வீடியோ…

News

குழந்தை பிறந்தப்பிறகும் கூட அப்படியே இருக்காங்க!.. பிரபலமாகும் சாயிஷாவின் குத்தாட்ட வீடியோ…

Social Media Bar

தமிழ் சினிமாவில் திடீரென அறிமுகம் ஆகிய வைரலான ஒரு சில நடிகைகளின் முக்கியமானவர் நடிகை சாயிஷா. வனமகன் திரைப்படத்தில் காவியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தது மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் சாயிஷா.

முதல் திரைப்படமே அவருக்கு சிறப்பான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கூட சாய்ஷாவிற்கு அந்த திரைப்படம் மூலமாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

முக்கியமாக அவரது தனிப்பட்ட நடனம் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருந்தது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்றார் சாய்ஷா. அதனை தொடர்ந்து அடுத்த வருடமே கடை குட்டி சிங்கம், கஜினிகாந்த் என்று நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார் சாயிஷா.

திருமணத்திற்கு பிறகு சாயிஷா:

கஜினிகாந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது நடிகர் ஆர்யாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகு சாய்ஷா நடித்த காப்பான் டெடி ஆகிய திரைப்படங்களில் ஆர்யாவும் அவர்களுடன் நடித்திருப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் 10 தல திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலிலும் அவர் நடித்திருந்தார். குழந்தை பிறந்த பிறகும் கூட அவர் தனது உடலை சரியாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

To Top