திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!.. பிரபல பாடகியின் பாடலுக்கு இளையராஜா கொடுத்த பதிலடி!..

Ilayaraja: தமிழ் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இளையராஜா. இளையராஜா இசையமைத்த காலங்களில் அவருக்கு இணையாக இன்னொரு இசையமைப்பாளர் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு இசையின் மூலமாக மக்கள் மனதில் ஒரு ராஜ்ஜியத்தை செய்தவர் இளையராஜா.

இளையராஜாவை பொறுத்தவரை அவரது பாடலை பாடுபவர்கள் சிறு தவறு செய்தாலும் கூட அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு விடுதலை படத்தில் ஒன்னோட நடந்தா என்ற பாடலை தனுஷ் பாடும்போது அதில் பிழை இருந்ததால் திரும்ப திரும்ப பாட வைத்தார் இளையராஜா.

ஆனால் இளையராஜா மேடையில் பாடும்போது அங்கு பாடும் பாடகி தவறாக பாடியும் அதை அவர் பொறுத்துக்கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. ஹிந்தியில் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் மிக பிரபலமானதை அடுத்து தமிழிலும் சில பாடல்களை பாடினார்.

ilayaraja
ilayaraja
Social Media Bar

பருத்திவீரன் திரைப்படத்தில் வரும் அய்யய்யோ பாடலை கூட அவர்தான் பாடியிருப்பார். அவர் ஒருமுறை இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் காற்றில் எந்தன் கீதம் என்கிற பாடலை பாடியிருந்தார். அதை பாடும்போது காற்றில் எந்தன் கீதம் காணாது ஒன்றை தேடுதே என்பதற்கு பதில் தோடுதே என பாடிவிட்டார்.

இரண்டு முறை தவறாக பாடும்போது மக்களின் ரியாக்‌ஷனை பார்த்த ஸ்ரேயா கோஷல் மூன்றாவது முறை அவரே அதை சரி செய்து பாடினார். அதற்கு பிறகு பேசிய இளையராஜா திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இரண்டு முறை தவறாக பாடியதை அவரே கண்டறிந்து மூன்றாவது முறை சரியாக பாடியுள்ளார்.

வேற்று மொழி ஆள் தமிழ் பாடல் பாடுவதால் இதை நாம் மன்னித்துவிடலாம் என கூறினார் இளையராஜா. ஸ்ரேயா கோஷலுக்கு தமிழே தெரியாது என்பது இதில் முக்கியமான விஷயமாகும்.