பரோட்டா குருமாவை கைல ஊத்துனதுக்காக கடையையே பிரிச்சுட்டோம்… மதுரையில் சித்தார்த் செய்த சம்பவம்!.

Actor Siddharth: இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். சித்தார்த்தை பொறுத்தவரை அவர் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரம் என கூறலாம்.

பேட்டிகளிலும் சரி மக்கள் மத்தியில் பேசும்போதும் சரி மற்ற நடிகர்களை போல மிக சீரியஸாக பேசிக் கொண்டிருக்க மாட்டார். மிகவும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். தமிழ் சினிமாவில் அவருக்கென அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் பல திரைப்படங்களில் சித்தார்த் நடித்திருக்கிறார்.

தற்சமயம் அவர் நடித்து வெளியான சித்தா என்கிற திரைப்படம் வெகுவாக பேசப்பட்டது. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பேசப்பட்ட இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் ஜிகர்தண்டா படப்பிடிப்பில் இருந்த பொழுது நடத்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கூறியிருந்தார்.

Social Media Bar

ஜிகர்தண்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் பொழுது தினமும் மதுரையில் உள்ள ஒரு உணவகத்தில்தான் கூட்டமாக சேர்ந்து அனைவரும் உணவு அருத்துவார்களாம். அப்படி ஒருமுறை உணவருந்தி கொண்டிருந்த பொழுது அந்த கடையின் வேலையால் தெரியாமல் சித்தார்த்தின் கையில் குருமாவை ஊற்றி விட்டார் அதற்காக பிரச்சனை செய்த பட குழுவினர்.

 பிறகு யோசித்து அதையே படத்தில் காட்சியாகவும் வைத்திருக்கின்றனர் அப்போது படத்தின் காட்சிகளுக்காக அந்த கடையை பிரித்து மேய்ந்துவிட்டனர்களாம் பட குழுவினர் இதை சித்தார்த் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.