கமலுடன் நடனமாடியப்போது கண்ணீர் விட்ட சில்க் ஸ்மிதா!.. சினிமாவே வேண்டாம் என முடிவெடுக்க காரணம் என்ன?

Silk Smitha: கவர்ச்சி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் பெரிதாக பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சில்க் ஸ்மித்தா. அப்போதெல்லாம் சினிமாவில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. கவர்ச்சி காட்சிகளுக்காகவே திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம் அப்போது இருந்தது.

அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் சில்க் ஸ்மித்தாவின் நடிப்பு இருந்ததால் பலரும் அவரது திரைப்படங்களுக்கு விரும்பி செல்ல துவங்கினர். ஆனால் சில்க் ஸ்மித்தாவிற்கு ஒரு நடிகை ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது.

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு தேடி வந்த சில்க் ஸ்மித்தாவிற்கு முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என நினைத்த சில்க் ஸ்மித்தா வண்டி சக்கரம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

Social Media Bar

அதற்கு பிறகு அவர் கவர்ச்சி நடிகையாக அவர் நடிக்க துவங்கினார். பிறகு எவ்வளவு முறை அவர் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டாலும் மீண்டும் மீண்டும் கவர்ச்சியாக நடிக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் பாலு மகேந்திரா மூன்றாம் பிறை திரைப்படத்தை இயக்கினார்.

அந்த படத்தின் கதைப்படி கதாநாயகி மனநல பாதிக்கப்பட்டவர் என்பதால் ஸ்ரீதேவியை வைத்து கவர்ச்சி காட்சிகள் வைப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. எனவே அதற்காகவே அந்த படத்தில் சில்க் ஸ்மித்தாவை நடிக்க வைத்து அவருக்கு பொன்மேனி உருகுது என்கிற கவர்ச்சி பாடலையும் வைத்தார்.

அந்த பாடலின் போது உடலில் குறைவான அளவில் உடையணிந்து காலில் செருப்பு கூட இல்லாமல் ஆடுவார் சில்க் ஸ்மித்தா. அதுக்குறித்து ஒருமுறை கூறும்போது அந்த படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அந்த குளிரில் இவ்வளவு குறைவான ஆடையை போட்டு ஆடுவது கடினமாக இருந்தது. இதனால் நான் அன்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

சினிமாவை விட்டே போய்விடலாம் என்றெல்லாம் தோன்றியது. ஆனால் அந்த பாடலை திரையரங்கில் பார்த்தப்போது வெகு சிறப்பாக வந்திருந்தது என கூறுகிறார் சில்க் ஸ்மித்தா!.