Connect with us

சிம்பு என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்..! ஆனா அசிஸ்டெண்டா வேலை பாத்தேன்! – நெல்சன் சொன்ன சம்பவம்!

simbu nelson

Cinema History

சிம்பு என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்..! ஆனா அசிஸ்டெண்டா வேலை பாத்தேன்! – நெல்சன் சொன்ன சம்பவம்!

Social Media Bar

தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் எழுதி, இயக்கியிருந்தார். நெல்சனுக்கு இதற்கு முன்னர் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ போதிய வரவேற்பை பெறாததால் சற்று சறுக்கல்கள் இருந்து வந்தது. அது அத்தனைக்கும் ஜெயிலரின் வெற்றி பதில் அளித்துள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் நெல்சன் தான் முன்னேறி வந்த பாதைகள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் “நான் காலேஜ் முடிச்சதும் விஜய் டிவில ப்ரொக்ராம் அசிஸ்டெண்டா வேலைக்கு சேர்ந்தேன். கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் 1 என பல ரியாலிட்டி ஷோக்களில் வேலை பார்த்தேன்.

அப்படி ஒரு ரியாலிட்டி ஷோவில் வேலை செஞ்சிட்டு இருக்கும்போதுதான் நடிகர் சிம்பு என்னை பார்த்தார். நானும் சிம்புவும் ஒரே ஸ்கூல்ல படிச்சவங்க. அவர் என்னைய பாத்ததும் ஏன் இதுலயே கிடந்து கஷ்டப்படணும். நீ சினிமாவுக்கு வந்துடு என கூப்பிட்டார்” என்று தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இப்படித்தான் ப்ரொக்ராம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்த நெல்சன் சினிமாவிற்குள் தான் நுழைய தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

To Top