படப்பிடிப்பு குழுவே கலாய்ச்ச பிறகுதான் அந்த காட்சியில் நடிச்சார்!.. சிம்புவை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்தான் போல!..

சில நடிகர்களிடம் சில வகையான நடிப்புகளை வாங்குவது என்பதை கடினமான விஷயம் என்று கூறலாம். அதில் நடிகர் சிம்புவை எடுத்துக்கொண்டால் நேரத்திற்கு அவர் படப்பிடிப்புக்கு வருவது என்பது சினிமாவில் நடக்காத ஒரு விஷயம் என்கிற அளவிற்கு ஒரு காலத்தில் பேசுபொருளாக இருந்தது அவர் விஷயம்.

தற்சமயம் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு மிகவும் டெடிகேஷனாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் சிம்பு, இருந்தாலும் கூட அவரது பழைய அட்ராசிட்டிகள் அவ்வப்பொழுது வெளிவருவதுண்டு. அப்படியாக தம் திரைப்படம் இயக்கப்படும் பொழுது நடந்த விஷயத்தை அந்த திரைப்படத்தின் இயக்குனர் கூறி இருக்கிறார்.

simbu
simbu
Social Media Bar

தம் திரைப்படத்தில் காலை ஐந்து முப்பது மணிக்கு ஒரு காட்சியை படமாக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை படமாக்கலாம் என்று இயக்குனர் பேசிக் கொண்டிருந்த பொழுது படக்குழுவை சேர்ந்த பலரும் சிம்பு முதலில் அந்த நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருவாரா?.

இதெல்லாம் நடக்கிற காரியமா அந்த காட்சியை நீங்கள் பாடமாக்க முடியாது என்று கூறி இருக்கின்றனர். சரி நான் சிம்புவுடன் பேசுகிறேன் என்று சென்ற இயக்குனர் சிம்புவிடம் சென்று நாளை காலை 5.30 க்கு படப்பிடிப்பு இருக்கிறது.

உங்களால் வர முடியுமா வர முடியாது என்றால் இப்பொழுதே கூறிவிடுங்கள் அதற்கு ஏற்றார் போல நான் என்ன செய்ய முடியும் என்று பார்த்துக் கொள்கிறேன். கடைசி நேரத்தில் வர முடியாது என்று கூறினால் என்னால் எதுவும் செய்ய முடியாது தயாரிப்பு செலவும் தேவையில்லாமல் வீணாகிவிடும் என்று கூறியிருக்கிறார் இயக்குனர்.

உடனே சிம்பு யோசித்தார் அதிகாலையிலேயே வர வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது இயக்குனர் படப்பிடிப்புக் குழுவில் நீங்கள் வர மாட்டீர்கள் என்று தான் கூறியிருக்கிறார்கள் என்று கூறவும் சிம்புவுக்கு கோபம் வந்துவிட்டது.

யார் கூறினார்கள் என்று சிம்பு கேட்க மொத்த பட குழுவும் தான் கூறினார்கள் என்று இயக்குனர் கூறி இருக்கிறார். இதனை அடுத்து நாளை நான் படப்பிடிப்பில் சரியான நேரத்தில் இருப்பேன் என்று கூறியிருக்கிறார் சிம்பு. மறுநாள் 4.40க்கு படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் வந்துள்ளார் பார்த்தால் அங்கு ஏற்கனவே சிம்பு அமர்ந்திருந்தாராம் அப்படி அனைவரும் கேலி செய்ததால் அந்த காட்சியை அவர் நடிக்க வந்தார் என்று கூறி இருக்கிறார் இயக்குனர்.