சர்ச்சையில் சிக்கிய போது என்னை காப்பாற்றியவர் ஏ.ஆர் ரகுமான்.. சீக்ரெட்டை கூறிய சிம்பு..!
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கின்றன.
மேலும் மக்கள் மத்தியில் அந்த படங்களுக்கு வரவேற்பும் இருந்து வருகிறது மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த பத்து தல திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்சமயம் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இந்நிலையில் மணிரத்தினமும் ஏ.ஆர். ரகுமானும் தனக்கு எப்படி உதவினார்கள் என்பது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சினிமாவில் எனக்கு ரெட் கார்ட் கொடுத்த சமயத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் மணி சார்.
அதுவும் இல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் என்னை அழைத்தார். இப்பொழுது மீண்டும் அவருடன் தக்லைஃப் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.
அதேபோல பீப் சாங் வெளியாகி நான் அதிக சர்ச்சையில் சிக்கி இருந்த பொழுது எனக்கு ஏ ஆர் ரகுமான் உதவினார். ம் அவர் இசையமைத்த தள்ளி போகாதே பாடலை என்னை பாட வைத்தார் என்று கூறியிருக்கிறார் சிம்பு.