தனுஷ் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார்..! இயக்குனர் கொடுத்த மாஸ் அப்டேட்..!
தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் தங்களுக்குள் போட்டி போட்டு கொள்வது வாடிக்கையான விஷயம்தான். அந்த வகையில் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். எப்படி நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்கள் திரைப்படங்களில் வரும் வசனங்களின் வழியாகவே சண்டை போட்டு கொள்கிறார்களோ அதே போலதான் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் சண்டையிட்டு கொண்டனர்.
சொல்ல போனால் தனுஷ்க்கு முன்பிருந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிம்பு பிரபலமானவராகதான் இருந்தார். ஆனால் சினிமாவில் இருந்த ஆரம்ப காலக்கட்டங்களில் படப்பிடிப்பில் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பது, படப்பிடிப்புக்கு வராமல் இருப்பது என பல விஷயங்களை செய்தார் சிம்பு.
இதனால் சிம்புவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கின. இந்த சமயத்தில் சினிமாவிற்கு வந்த தனுஷ் சிம்புவுக்கு நிகரான இடத்தை பிடித்தார். அதற்கு பிறகுதான் இவர்கள் இருவருக்கும் போட்டி துவங்கியது என ஒரு பேச்சு உண்டு.

இப்போது திரைப்படங்களில் நடிப்பதை போலவே அவற்றை இயக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் தனுஷ். இந்த நிலையில் நடிகர் தனுஷும் சிம்புவும் ஒன்றினைய வேண்டும் என கூறியுள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
இப்போது நடிகர் தனுஷ் திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதே சமயம் நடிகர் சிம்பு அவரது 60 வது திரைப்படத்தைதான் இயக்க போகிறார். அதற்கு முன்பு திரைப்படம் இயக்க மாட்டார். எனவே தனுஷ் இயக்கத்தில் சிம்பு படம் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் அது நடக்கவும் வாய்ப்புள்ளது. சினிமாவில் நிரந்தர எதிரிகள் என யாரும் இருந்ததில்லை என இதுக்குறித்து ஒரு பக்கம் கருத்து நிலவி வருகிறது.