Cinema History
வாலியின் பாடல் வரிகளை பாட முடியாமல் அழுத ஜானகி!.. இளையராஜாவுக்கும் முடியல!.
தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் கவிஞர்கள்தான் பாடல் வரிகளை எழுதி வந்தனர். ஏனெனில் கவிஞர்கள் அர்த்தமுள்ள வார்த்தைகளை கோர்த்து இசைக்கு தகுந்தார் போல பாடல் வரிகளை எழுதுவார்கள்.
ஆனால் இப்பொழுது எல்லாம் நடிகர்களே பாடல் வரிகளை எழுதுவதால் பாடல் வரிகளில் நல்ல அர்த்தங்களை காண முடியவில்லை. கவிஞர் வாலி பாடலாசிரியராக இருந்த காலகட்டங்களில் அவர் எழுதிய பல பாடல்கள் பல கருத்துக்களை முன் வைத்திருந்தன.
மேலும் அந்த அளவிற்கு பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் இருந்தது கிட்டத்தட்ட இசையமைப்பாளர்களுக்கு இணையான சம்பளத்தை பாடல் ஆசிரியர்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் பாடகி ஜானகி வாலி எழுதிய பாடல் ஒன்றிற்கு பாடுவதற்காக வந்திருந்தார்.
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் என்கிற அந்த பாடலை அவர் பாடி கொண்டிருந்த பொழுது பாதியிலேயே இளையராஜா அப்படியே நின்றுவிட்டார். என்னவென்று கேட்கும் பொழுது பாடலின் வரிகள் என்னை மிகவும் பாதிக்கின்றன என கூறியுள்ளார்.
மீண்டும் பாடல் இசையமைக்கப்பட்ட பொழுது ஜானகி அழ துவங்கி விட்டார் என்னவென்று பார்க்கும் பொழுது பிள்ளை பெறாத பெண்மை தாயானது அன்னை இல்லாத மகனை தாலாட்டுது என்கிற வரிகளை பாடும் பொழுது அந்தப் பாடல் வரிகள் அவரை அழ வைத்துவிட்டன என்று ஜானகி கூறியுள்ளார். அந்த அளவிற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த பாடல்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்