Connect with us

அஜித்தோடு நடிக்க எனக்கு ரொம்ப ஆசை!.. ஜெயிலருக்கு பிறகு அடுத்த படத்திற்கு ரூட் போடும் சிவராஜ்குமார்!

ajith shiv rajkumar

Cinema History

அஜித்தோடு நடிக்க எனக்கு ரொம்ப ஆசை!.. ஜெயிலருக்கு பிறகு அடுத்த படத்திற்கு ரூட் போடும் சிவராஜ்குமார்!

Social Media Bar

கன்னட நடிகர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக ராஜ்குமார் ராவின் குடும்பம் இருந்து வருகிறது. இவர்கள் தலைமுறை தலைமுறையாக கன்னட சினிமாவில் தங்களது பாதத்தை பதித்து வருகின்றனர். ராஜ்குமார் ராவின் திரைப்படங்களை கண்டுதான் நடிகர் ரஜினிகாந்திற்கு நடிகனாக வேண்டும் என்கிற ஆசையே வந்ததாம்.

ராஜ்குமார் ராவை போலவே ரஜினிகாந்த் பின்னாளில் ராகவேந்திரர் கதையை படமாக்கி நடித்தார். ராஜ்குமார் ராவின் அடுத்த தலைமுறையாக சினிமாவில் அவரது மகன்கள் நடித்து வருகின்றனர். அதில் அவரது கடைசி மகனான புனித் ராஜ்குமாரின் இறப்பு கர்நாடகாவில் பெரும் அலையை ஏற்படுத்தியது.

தற்சமயம் ராஜ்குமார் ராவின் முதல் மகன் சிவ ராஜ்குமார் முக்கியமானவராக இருந்து வருகிறார். சிம்பு நடித்த பத்து தல படத்தின் கன்னட வெர்ஷனில் இவர்தான் ஹீரோவாக நடித்திருந்தார். தற்சமயம் ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்சமயம் பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது அஜித் மிகவும் எளிமையான மனிதர். அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை என விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே அஜித்தின் அடுத்த படத்தில் இவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

To Top