தமிழில் பாடலே இல்லாமல் வெளிவந்த முதல் படம் எது தெரியுமா? அந்த சிவாஜி படமா!..

Sivaji Ganesan Movies:  தமிழ் சினிமா துவங்குவதற்கு முன்பு அது நாடகமாக இருந்த காலக்கட்டம் முதலே பாடல் என்பது சினிமாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் திரைப்படங்களில் நிறைய பாடல்கள் இருந்தன.

ஆனால் இப்போதெல்லாம் பாடல்களே இல்லாமல் திரைப்படங்கள் இருந்தால் கூட அதை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். கைதி மாதிரியான சில படங்களில் பாடல்களே இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் கருப்பு வெள்ளை காலக்கட்டத்திலேயே ஒரு இயக்குனர் இந்த விஷயத்தை செய்துள்ளார்.

இயக்குனர் எஸ். பாலச்சந்தர் அப்போது ஹாலிவுட் பாணியிலான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் எடுத்து வந்தார், அவர் இயக்கத்தில் வந்த அவனா இவன்,பொம்மை, நடு இரவில் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.

sivaji-ganesan
sivaji-ganesan
Social Media Bar

இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு க்ரைம் திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டார் எஸ்.பாலச்சந்தர். படக்கதையின்படி முதல் காட்சியிலேயே படத்தின் கதாநாயகன் கொலை செய்யப்பட்டுவிடுவார். அதற்கு பிறகு அந்த கொலையை யார் செய்தார் என்பதை கண்டறிவதே கதையாக இருக்கும்.

அதை எவ்வளவு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியும் என்றே யோசித்துக்கொண்டிருந்தார் எஸ்.பாலச்சந்தர். அந்த வகையில் அவர் எடுத்த திரைப்படம்தான் அந்த நாள். இந்த திரைப்படத்தில் முதலில் சிவாஜி கணேசன் நடிப்பதாக தேர்வாகவில்லை.

இரண்டு கதாநாயகர்களிடம் கதை கைமாறிய பிறகுதான் அது சிவாஜி கணேசன் கைக்கு வந்தது. தமிழிலேயே முதன் முதலில் பாடல்கள் இல்லாமல் வந்த படம் என இந்த படத்தைதான் கூறுகின்றனர்.