எம்.ஆர் ராதாவை பார்த்து சிவாஜி கணேசன் பயந்ததுக்கு இதுதான் காரணம்..! இவங்க ரெண்டு பேர்கிட்டயும் இப்ப உள்ள நடிகர்கள் கத்துக்கணும்!.
மொத்த தமிழ் சினிமாவாலும் நடிகர் திலகம் என கொண்டாடப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். நாடக துறையில் நடிகராக பல காலங்கள் இருந்துவிட்டுதான் சிவாஜி கணேசன் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனால் அவருக்கு யாரும் நடிப்பதற்கு கற்று தர வேண்டி இருக்கவில்லை.
அப்படிப்பட்ட சிவாஜி கணேசனே பார்த்து பயப்படும் ஒரு நடிகர் என்றால் அவர் எம்.ஆர் ராதாதான். நடிப்பில் என்னை விட சிறந்த நடிகர் எம்.ஆர் ராதா என பலமுறை கூறியிருக்கிறார் சிவாஜி. சிவாஜியை போலவே எம்.ஆர் ராதாவும் நாடக கம்பெனி நடத்தி அதில் நடித்து வந்தவர்தான்.
இருவருமே நடிப்பில் பெரிய புலி என்றுதான் கூற வேண்டும். சிவாஜி கணேசன் வீரப்பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடிக்கும்போது மிகவும் களைத்து போய்விடுவாராம். ஆனாலும் தொடர்ந்து நாடகம் முடியும் வரை கம்பீரமாக நின்று அந்த நாடகத்தை நடத்தி கொடுப்பார்.

அதே சமயம் நாடக துறையில் எம்.ஆர் ராதா அவரை மிஞ்சி வேற லெவல் செய்வாராம். இரத்த கண்ணீர் நாடகத்தை அவர் போட்டப்போது மாலை 4 மணி முதல் 9 மணி வரை நாடகம் நடக்கும். முதல் பாதியில் கோர்ட் சூட் போட்டு நடித்து வரும் எம்.ஆர் ராதா அடுத்த பாதிக்கு வேக வேகமாக கெட்டப்பை மாற்றி குஷ்ட ரோகியாக நடிக்க வேண்டும்.
இதில் ஹைலைட் என்னவென்றால் 9 மணிக்கு நாடகம் முடிந்த பிறகு மீண்டும் 10 மணிக்கு அதே இரத்த கண்ணீர் நாடகத்தை துவங்கி இரவு 2 மணி வரைக்கும் நடத்துவார்களாம். இதனால் மீண்டும் குஷ்டரோகி கெட்டப்பில் இருந்து கோர்ட் சூட் கெட்டப்புக்கு மாறி, மீண்டும் முதல் பாதி முடிந்ததும் குஷ்ட ரோகி வேஷத்தில் வந்து நடிப்பாராம் எம்.ஆர் ராதா.
அதனால்தான் எம்.ஆர் ராதாவை பார்த்து சிவாஜி கணேசனே பயந்துள்ளார்.