நான் உங்கள் வசனத்தை பேசியதால்தான் அதற்கு பெருமை!.. கருணாநிதி பேச்சுக்கு அப்போதே பதிலடி கொடுத்த சிவாஜி!…
Kalainger M karunanithi and Sivaji ganesan: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக எல்லா காலங்களிலும் போற்றப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனின் நடிப்பிற்கு இணையாக இப்போது வரை இன்னொரு நடிகரை தமிழ் சினிமா பிரபலங்களே பார்த்தது கிடையாது என கூறலாம்.
அடுத்து ரஜினி அடுத்த எம்.ஜி.ஆர் என பேச்சுக்கள் தமிழ் சினிமாவில் இருப்பதை போல அடுத்த சிவாஜி கணேசன் என்கிற பேச்சு மட்டும் இருந்ததே கிடையாது. ஆரம்பக்கட்டத்தில் சிவாஜி கணேசன் முதன் முதலாக நடித்த பராசக்தி திரைப்படம்தான் அவரை சினிமாவில் பெரிதாக உயர்த்தியது.

இந்த திரைப்படத்திற்கு திரைக்கதையை கலைஞர் மு கருணாநிதிதான் எழுதினார். இந்த நிலையில் ஒருமுறை கருணாநிதி பேசும்போது எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் என்னுடைய வசனங்களை பேசிதான் வரவேற்பை பெற்றனர் என கூறியிருந்தார்.
அந்த விஷயத்தை கேள்விப்பட்டப்போது சிவாஜிக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. உடனே இதற்கு பதிலடி கொடுத்தார் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் பத்திரிக்கைக்கு இதுக்குறித்து பதில் கொடுக்கும்போது கருணாநிதியின் வசனங்களை நான் பேசியதால்தான் அந்த வசனத்திற்கு பெருமை.
பராசக்தி திரைப்படத்தை பொறுத்தவரை அதன் இயக்குனர் மட்டுமே என்னை கதாநாயகனாக்க வேண்டும் என்று பெரும்பாடு பட்டார் மற்றவர்கள் யாரும் அதற்கான பெருமையை பெற்றுக்கொள்ள முடியாது. சொல்ல போனால் கருணாநிதியின் அரசியல் கொள்கைகளை பொது மக்களிடம் கொண்டு சென்றதில் எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் முக்கிய பங்குண்டு என மிக வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளார் சிவாஜி கணேசன்.
அந்த அளவிற்கு எல்லாம் அப்போது சினிமாவில் பிரபலங்களுக்கு மத்தியில் பிரச்சனை இருந்துள்ளது.