Connect with us

ஹீரோ ஆகனும்னு வந்த மூஞ்ச பாரு!.. சிவாஜியிடம் திட்டு வாங்கிய பாரதிராஜா!..

Cinema History

ஹீரோ ஆகனும்னு வந்த மூஞ்ச பாரு!.. சிவாஜியிடம் திட்டு வாங்கிய பாரதிராஜா!..

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களுக்கு எல்லாம் மூத்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இந்திய சினிமாவிலேயே அவருக்கு இணையான ஒரு நடிகர் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சிவாஜி. ஒவ்வொரு திரைப்படத்திலும் தனிப்பட்ட தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்த கூடியவராக சிவாஜி கணேசன் இருந்தார்.

அதேபோல பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டத்திற்கு பிறகு வந்த டிஜிட்டல் சினிமாவில் நடிப்பது என்பது பலருக்கும் சவாலான விஷயமாக இருந்தது. ஆனால் சிவாஜி கணேசன் அதையும் மிக எளிதாக செய்தார் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களில் முதல் மரியாதை திரைப்படத்திற்கு முக்கிய இடம் உண்டு. பாரதிராஜா இயக்கி வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது.

 இந்த திரைப்படத்தை இயக்கும் பொழுது சிவாஜி கணேசன் பாரதிராஜாவிடம் பேசும் பொழுது இந்த படத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும் என சிவாஜி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த பாரதிராஜா நான் சொல்கிறபடி மட்டும் நீங்கள் நடித்தால் போதும் சார் என கூறியுள்ளார் இந்த பதில் சிவாஜி கணேசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உடனே சிவாஜி கணேசன் பாரதிராஜாவிடம் நீ என்ன ஆக வேண்டும் என்று சினிமாவிற்கு வந்தாய் எனக் கேட்டார் அதற்கு பதில் அளித்த பாரதிராஜா நான் சினிமாவில் கதாநாயகனாக ஆசைப்பட்டேன் என கூறியுள்ளார். அதற்கு சிவாஜி கணேசன் கண்ணாடியில் உன் முகத்தை இதற்கு முன்னர் பார்த்து இருக்கிறாயா? என்று உருவ கேலி செய்துள்ளார்.

ஆனால் உண்மையில் சிவாஜி கணேசன் சினிமாவிற்கு அறிமுகமான பொழுது அவரும் இதே மாதிரியான கேளிக்கு தான் உள்ளானார்.  ஆனால் முதல் மரியாதை திரைப்படம் வெளியான பிறகு பாரதிராஜாவின் திறமையை அறிந்து கொண்டார் சிவாஜி.

To Top