Connect with us

அடேய் திருட்டு பயலே !.. கமல்ஹாசன் செய்கையால் அதிர்ச்சியடைந்த சிவாஜி கணேசன்..

Cinema History

அடேய் திருட்டு பயலே !.. கமல்ஹாசன் செய்கையால் அதிர்ச்சியடைந்த சிவாஜி கணேசன்..

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பலராலும் வெகுவாக பாரட்டப்படும் நடிகராக சிவாஜி கணேசன் இருக்கிறார். சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இணையாக இன்னொரு நடிகர் அப்போது கிடையாது என பரவலாக பேச்சு இருந்தது.

சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு நடிப்பை கொடுக்கும் நடிகராக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படமாக தேவர் மகன் திரைப்படம் உள்ளது. இதனாலேயே தேவர் மகன் திரைப்படம் சிறப்பு வாய்ந்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நடிகர் கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார். தேவர் மகன் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போது சிவாஜி கணேசன் அமரும் நாற்காலிக்காக வெகுநேரமாக காத்திருந்தனர். ஏற்கனவே இரண்டு நாற்காலிகள் கொண்டு வரப்பட்டன.

ஆனால் அவை யாவும் கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லை. இதையெல்லாம் பார்த்து கடுப்பான சிவாஜி கணேசன் எதுக்குடா ஒரு நாற்காலிக்காக இப்படி சண்டை போட்டுக்கிறீங்க என சத்தம் போட்டுள்ளார். அதன் பிறகு இருக்கும் நாற்காலியை வைத்தே படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஆனால் படம் வெளியான பிறகுதான் சிவாஜிக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவரது கதாபாத்திரம் இறந்தப்பிறகு கமல்ஹாசனின் கதாபாத்திரம் அந்த நாற்காலியில்தான் அமரும். அதை பார்த்த சிவாஜி கணேசன் அட திருட்டு பயலே அன்னைக்கு உனக்காகதான் அந்த நாற்காலியை எதிர்பார்த்துட்டு இருந்தியா என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை கமல்ஹாசன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

To Top