News
1961 மட்டும் சிவாஜி கணேசனுக்கு முக்கியமான வருஷம்!.. எம்.ஜி.ஆருக்கே ஆட்டம் காட்டிய நடிகர் திலகம்!..
சினிமாவில் ஒரு நடிகரின் வளர்ச்சி என்பது அவர்களது படங்கள் கொடுக்கும் வெற்றியை பொறுத்தே அமைகிறது. கமல்ஹாசன் ரஜினிகாந்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் பெரும் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும்தான்.
எம்.ஜி.ஆரை விடவும் சிவாஜி கணேசனை வைத்து படம் இயக்குவது எளிது. ஏனெனில் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களில் அந்த படத்தில் வரும் பாடல்கள் வரை படத்தில் நடிப்பவர்கள் வரை எல்லாம் எம்.ஜி.ஆரின் இஷ்டப்படிதான் இருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது.

ஆனால் சிவாஜி கணேசனை பொறுத்தவரை அப்படியான எந்த ஒரு விதிமுறைகளும் கிடையாது. அதே போல நாட்டுக்கு நல்லது செய்யும் ஹீரோவாக மட்டுமே சிவாஜி நடித்துக்கொண்டிருக்க மாட்டார். மற்ற கதாபாத்திரங்களிலும் கூட நடிப்பார்.
இந்த நிலையில் 1961 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனுக்கு முக்கியமான ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டு தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை ஓரங்கட்டி வெற்றி கொடுத்து வந்தார். அப்போது வெளியான பாவ மன்னிப்பு, பாச மலர் இரண்டு திரைப்படங்களுமே சில்வர் ஜுப்லி ஹிட் கொடுத்தது.
மேலும் அப்போது வந்த பாலும் பழமும், கப்பலோட்டிய தமிழன் இரண்டு திரைப்படங்களுமே 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி கொடுத்தன. இதனை தொடர்ந்து சிவாஜி கணேசனின் மார்க்கெட் அந்த ஒரு வருடத்தில் வேறு லெவலுக்கு உயர்ந்தது.
