Connect with us

சுதந்திர போராட்ட வீரர் எங்கப்பா!.. பிறந்தவுடன் சிவாஜிக்கு நடந்த சம்பவம்!.

sivaji ganesan

Cinema History

சுதந்திர போராட்ட வீரர் எங்கப்பா!.. பிறந்தவுடன் சிவாஜிக்கு நடந்த சம்பவம்!.

Social Media Bar

தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் என தொல்காப்பியரை கூறுவது போல நடிப்புக்கு இலக்கணம் எழுதியவர் சிவாஜி கணேசன் என கூறி பலரும் சிவாஜி கணேசனை வாழ்த்துவதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் சிவாஜி கணேசன்.

பொதுவாக தற்சமயம் இருக்கும் பெரும்பாலான நடிகர்கள் ஒரே மாதிரியான நடிப்பை மட்டுமே வெளிக்காட்டி வருகின்றனர். ஆனால் சிவாஜி காலக்கட்டத்தில் எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் சிவாஜி கணேசன் அதை சிறப்பாக செய்யக்கூடியவராக இருந்தார்.

ஒரு பேட்டியில் அவர் தனது குழந்தை பருவ நிகழ்வுகள் குறித்து பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது எனது தந்தை ஒரு தேச போராட்ட வீரராக இருந்தார். நான் பிறக்கும்போதே அவர் சிறைக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஏழு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

sivaji-ganesan
sivaji-ganesan

அதன் பிறகு அவரது நன்னடத்தையை பார்த்து 4 வருடங்களில் அவரை வெளியில் விட்டனர். ஆனால் சிறைக்கு சென்றதால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் எனது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்தது.

இந்த நிலையில்தான் எங்கள் ஊரில் நடந்த கட்டபொம்மு நாடகத்தை நான் பார்த்தேன். எனக்கும் அந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. அதனை தொடர்ந்து நான் ஒரு அனாதை என கூறி ஒரு நாடக கம்பெனியில் சேர்ந்தேன்.

அதற்கு பிறகு 7 வருடங்கள் கழித்துதான் எனது குடும்பத்தை பார்த்தேன். அதற்குள் நான் இறந்துவிட்டதாக நினைத்திருந்தனர் எனது குடும்பத்தினர் என கூறுகிறார் சிவாஜி கணேசன்.

To Top