Connect with us

எஸ்.கேவுக்கு செஞ்ச செய்கைக்கு இப்ப பழி வாங்கிட்டார் போல..கங்குவா படத்திற்கு சிவகார்த்திகேயன் வைத்த ஆப்பு..!

surya kanguva

Tamil Cinema News

எஸ்.கேவுக்கு செஞ்ச செய்கைக்கு இப்ப பழி வாங்கிட்டார் போல..கங்குவா படத்திற்கு சிவகார்த்திகேயன் வைத்த ஆப்பு..!

Social Media Bar

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து அதிக எதிர்பார்ப்பை பெற்ற திரைப்படமாக கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரையரங்குகளில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காரணத்தினாலேயே தொடர்ந்து படத்தை வெளியிடுவதிலும் மாற்றங்கள் இருந்து வந்தன. படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதால் பெரிதாக படம் வராத நாளில் படத்தை வெளியிட வேண்டும் என்பது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் விருப்பமாக இருந்தது.

அதனாலேயே படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டு வந்தது. அக்டோபர் பத்தாம் தேதி கூட வேட்டையன் வெளிவந்த காரணத்தினால் அடுத்த தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என்று இருந்தனர்.

kanguva

kanguva

சிவகார்த்திகேயன் பதிலடி:

ஆனால் அமரன் மாதிரியான பெரிய படங்கள் தீபாவளிக்கு வருகிற காரணத்தினால் அதிலிருந்து 15 நாட்களுக்கு நவம்பர் 14ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டனர் அதே போல படமும் நேற்று வெளியானது ஆனால் இதை படத்தில் பிரச்சனை என்னவென்றால் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம் 15 நாட்களை கடந்த பிறகு கூட மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதனால் நிறைய திரையரங்குகள் அமரன் திரைப்படத்தை இன்னமும் திரையில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர். திரையரங்குகளை பொறுத்தவரை முதல் இரண்டு வாரங்களை விட அதற்குப் பிறகு ஓடும் காலங்களில் தான் படங்களில் இருந்து வரும் லாபம் அதிகமாக கிடைக்கும்.

அதனால் திரையரங்குகள் இந்த படத்தை எடுத்துவிட்டு கங்குவாவை வெளியிட மறுக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவில் திரையரங்குகள் கங்குவா படத்திற்கு கிடைக்கவில்லை இதனால் கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறைந்து இருக்கிறது. முன்பு ஒருமுறை ஞானவேல்ராஜா சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பதாக கூறி அவருக்கு அவதி கொடுத்ததாக ஒரு பேச்சு உண்டு.

தனது படத்தின் வாயிலாக அதற்கு பதிலடி தந்துள்ளார் சிவகார்த்திகேயன் என்கின்றனர் ரசிகர்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top