Connect with us

அயலான் படத்தால் கிராபிக் நிறுவனத்திற்கு மட்டும் 200 கோடி லாபமா? இது எப்படி நடந்தது!..

ayalaan sivakarthikeyan

News

அயலான் படத்தால் கிராபிக் நிறுவனத்திற்கு மட்டும் 200 கோடி லாபமா? இது எப்படி நடந்தது!..

Social Media Bar

Sivakarthikeyan:  தற்சமயம் வரிசையாக எதிர்பார்ப்பை பெரும் திரைப்படமாக நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். டான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மேலும் ஒரு படி மேலே சென்றார். வசூல் ரீதியாக அந்த படம் 100 கோடியை வசூல் செய்தது.

ஆனால் அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பிரின்ஸ் திரைப்படத்திற்கு பிறகு வெளிவந்த மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

வழக்கமாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ சூப்பர் பவர் போன்ற கதை அம்சங்களை கொண்டு படம் நடிப்பவராக சிவகார்த்திகேயன்தான் இருக்கிறார். ஏனெனில் சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவருக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். எனவே குழந்தை ரசிகர்களை கவர் செய்யும் வகையில் அவரது திரைப்படங்கள் அமைகின்றன.

sivakarthikeyan
sivakarthikeyan

இதனாலேயே தொடர்ந்து தனது திரைப்படங்களில் கவர்ச்சி காட்சிகளை குறைத்து வருகிறார் சிவகார்த்திகேயன்.  அதேபோல குழந்தைகளுக்காக ஒரு திரைப்படமாக தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம்தான் அயலான்.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படமாக்கப்பட்டு வந்தது இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அதிகம் செலவான காரணத்தினால் படத்தின் வெளியீட்டு தேதியானது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த படத்தை எப்படியாவது திரையரங்கிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக சம்பளம் கூட வாங்காமல் இந்த படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதைவிட அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்குவதில் இதற்கு கிராபிக்ஸ் வேலை செய்த ஃபாண்டம் எஃப் எக்ஸ் என்னும் நிறுவனம் மிகுந்த ஆவலாக இருக்கிறதாம்.

ஏனெனில் இந்தப் படத்திற்கு வேலை செய்ததன் மூலமாக மட்டும் இந்த நிறுவனத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது அதன் மூலமாக இதுவரை 200 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ப்ராஜெக்ட்டுகள் இந்த நிறுவனத்திற்கு வந்துள்ளதாம். எனவே தொடர்ந்து அயலான் 2 திரைப்படத்தையும் இவர்களே கிராபிக்ஸ் வேலைகள் செய்வதன் மூலம் இன்னும் அதிக விளம்பரம் அவர்கள் நிறுவனத்திற்கு கிடைக்கும் என்று நினைக்கின்றனர்.

To Top