தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் அவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் மனம் கொத்தி பறவை.
அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படம் எதிர்நீச்சல். எதிர்நீச்சல் திரைப்படத்திற்கு அனிரூத் தான் இசையமைத்து இருந்தார். அப்போதில் இருந்தே இவருக்கும் அனிரூத்துக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இதனாலேயே பெரும்பாலும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிரூத் தான் இசையமைத்து வந்தார்.
எஸ்.கே எடுத்த முடிவு:
ஆனால் சில நேரங்களில் இசையமைப்பாளர்கள் மாறுவதும் உண்டு. அந்த வகையில் அடுத்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவில்லை என கூறப்படுகிறது.
மாறாக இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர்தான் இசையமைக்கிறாராம். தொடர்ந்து அடுத்து அனிரூத்தின் வாய்ப்புகளை எல்லாம் சாய் அபயங்கர் எடுத்து கொள்கிறாரா என இதுக்குறித்து கேள்விகள் எழுந்து வருகின்றன.









