Connect with us

சிவகார்த்திகேயனின் அடுத்த பட சம்பள அப்டேட்.. கேட்டா ஆடிப்போயிடுவீங்க..! விட்டா விஜய்யை தொட்டுருவார் போலயே..!

sk vijay ajith

Tamil Cinema News

சிவகார்த்திகேயனின் அடுத்த பட சம்பள அப்டேட்.. கேட்டா ஆடிப்போயிடுவீங்க..! விட்டா விஜய்யை தொட்டுருவார் போலயே..!

Social Media Bar

Sivakarthikeyan starrer Amaran has given good success. Following this, Sivakarthikeyan has increased his salary in his next films.

தமிழ் சினிமாவில் மிக சீக்கிரத்திலேயே பெரும் வளர்ச்சியை கண்ட ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு முன்பிருந்தே சினிமாவில் இருக்கும் விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் கூட இன்னும் தொட முடியாத உச்சத்தை சிவகார்த்திகேயன் மிகச் சீக்கிரத்திலேயே தொட்டிருக்கிறார்.

அவர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து விஜய் அஜித் மாதிரியே இவரும் கமர்சியலாக வெற்றி பெறும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் தனுஷ் மாதிரியோ விஜய் சேதுபதி போல சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதாபாத்திரங்களை நடிக்க முடியாது.

எஸ்.கேவின் நடிப்பு:

ஏனெனில் தொடர்ந்து ஒரே மாதிரியான நடிப்பைதான் அவர் வெளிப்படுத்தி வருகிறார் என்றும் ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் 30 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அமரன் திரைப்படத்திற்கு குறைவான அளவில்தான் சம்பளம் வாங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு இவர் 20 கோடி ரூபாய்தான் சம்பளமாக வாங்கினாராம். ஏனெனில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பாளர் என்பதால் அவருக்காக இவர் சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கூடிய சம்பளம்:

இந்த நிலையில் அமரன் திரைப்படம் தற்சமயம் பெரும் வெற்றியை கொடுத்ததை அடுத்து தனது சம்பளத்தை 50 கோடியாக மாற்றி இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அடுத்து சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த திரைப்படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி விட்டதால் அதற்கு ஏற்கனவே கூறிய சம்பளத்தையே வாங்கி இருக்கிறாராம் சிவக்கார்த்திகேயன்.

To Top