தலைக்கு தில்ல பாத்திங்களா.. பெரிய ஹீரோக்களுக்கே ஷாக் கொடுத்த எஸ்.கேவின் அக்ரிமெண்ட்.!
வளர்ந்து வரும் நடிகர் என்கிற கட்டத்திலிருந்து தற்சமயம் தமிழில் பெரிய ஹீரோக்கள் லிஸ்டில் சேர்ந்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் கொடுத்த வெற்றி தான் இதற்கு முக்கிய காரணம்.
அமரன் திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரிய ஹீரோக்களின் வசூல் சாதனையை சிவகார்த்திகேயனுக்கு ஏற்படுத்தி கொடுத்தது.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சம்பளமும் அதிகரித்து இருக்கிறது. மேலும் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் எல்லாமே தமிழில் முக்கிய இயக்குனர்களின் படங்களாக இருக்கின்றன.
தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் சுதா கொங்கரா திரைப்படத்தில் புதிய அக்ரிமெண்ட் ஒன்றை போட்டு இருக்கிறாராம் சிவகார்த்திகேயன் அதன்படி படம் வெளியாகி கொடுக்கும் வசூலில் குறிப்பிட்ட சதவீதத்தை சம்பளமாக சிவகார்த்திகேயன் கேட்டிருக்கிறார்.
இது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது ஏனெனில் ஒரு ஹீரோ இந்த மாதிரி பர்சன்டேஜ் வாங்கி நடிக்கிறார் என்றால் அவர் மிகவும் பொறுப்பாக நடிப்பார்.
ஏனெனில் அந்த படம் ஓடினால் தான் அவருக்கு சம்பளமே கிடைக்கும் பெரும்பாலும் பெரிய நடிகர்கள் யாரும் இந்த ரிஸ்கை எடுப்பது கிடையாது.
அவர்கள் படம் ஓடினாலும் ஓடவிட்டாலும் தங்களுக்கு என்று சில நூறு கோடிகளை சம்பளமாக வாங்கி விடுகின்றனர் இதனை அடுத்து சிவகார்த்திகேயனை பார்த்து இவர்கள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சினிமா வட்டாரத்தினர் பேசி வருகின்றனர்.