இலங்கை பிரச்சனையை கையில் எடுத்த எஸ்.கே… முதல் நாள் படப்பிடிப்பே இப்படியா?
தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடிக்காமலே இருந்து வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
ஏனெனில் காமெடி கதாநாயகனாக இவர் அறிமுகமானார் என்பதால் அவருக்கு சீரியஸ் கதாபாத்திரம் என்பது அதிக வரவேற்பை பெற்று தராமலே இருந்து வந்தது. ஆனால் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்துள்ளன.
இனி விஜய் அஜித் மாதிரியான முழு சீரிஸ் படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என்கிற சூழல் உருவாகியுள்ளது. எனவே சிவகார்த்திகேயனும் அதற்கு தகுந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்காரா மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் ஆகிய இயக்குனர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பே இலங்கையில் யாழ்பாணத்தில் துவங்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு சிங்கள வன்முறையாளர்களால் அங்கிருந்த நூலகம் ஒன்று எரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 95000 நூல்களை கொண்ட அந்த நூலகம் அழிந்தது இன்னமும் இலங்கையின் வரலாற்றில் அழியாத வடுவாக இருந்து வருகிறது. அதை அடிப்படையாக கொண்டுதான் தற்சமயம் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.