Connect with us

விஜய் பையனாவே இருந்தாலும் அதெல்லாம் பண்ண முடியாது!.. நோ சொன்ன சிவகார்த்திகேயன்!.

jason sanjay sivakarthikeyan

News

விஜய் பையனாவே இருந்தாலும் அதெல்லாம் பண்ண முடியாது!.. நோ சொன்ன சிவகார்த்திகேயன்!.

Social Media Bar

Sivakarthikeyan : பொதுவாக வாரிசு அரசியலை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் மகன் சினிமாவிற்கு வருகிறார் என்றால் அவரும் நடிகராக ஆசைப்படுவார். ஏனெனில் மொத்த தமிழ் சினிமாவிலேயே கதாநாயகனாக நடிக்கும் நடிகருக்கு கிடைக்கும் சம்பளம் மற்ற எந்த ஒரு பிரபலத்திற்கும் கிடைப்பதில்லை.

ஆனாலும் கூட விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை இதில் விஜய்க்கு பெரிதாக உடன்பாடு கிடையாது என்று கூறப்படுகிறது.

கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் விஜய். ஆனால் ஜேசன் சஞ்சய்க்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசை என்பதால் அவருக்கு லைக்கா நிறுவனத்தில் வாய்ப்பு ஒன்றை வாங்கி கொடுத்தார் விஜய். அதற்கு பிறகு திரைக்கதை வேலையை தொடங்கிய ஜேசன் சஞ்சய் தற்சமயம் திரைக்கதையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறாராம்.

jason-sanjay
jason-sanjay

படத்தின் பட்ஜெட்டையும் அதிகரித்து இருக்கிறாராம். எனவே சின்ன நடிகர்களை வைத்து இந்த திரைப்படத்தை இயக்க முடியாது ஏனெனில் படத்தின் பட்ஜெட் பெரிதாக இருப்பதால் பெரிய கதாநாயகர்களை வைத்துதான் இயக்க வேண்டும் என்றுதான் தற்சமயம் தமிழில் உள்ள பெரிய நடிகர்களிடம் இதுப்பற்றி பேசி வருகிறார் ஜேசன் சஞ்சய்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனிடம் இவர் கதை கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். ஏனெனில் ஏற்கனவே ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆவதில் நடிகர் விஜய்க்கு பெரிதாக விருப்பம் இல்லாமல் இருக்கிறது.

அதே சமயம் அடுத்து விஜய்யின் இடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்று கேள்வியும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தில் நடிப்பது அவருக்கு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.

அதே சமயம் அந்த கதையும் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்திற்கு தகுந்தார் போல இல்லை என்றும் ஒரு பக்கம் பேச்சு இருக்கிறது.

To Top