ஆனா ஊனா துப்பாக்கிய தூக்கிட்டு வந்துடுறாங்க!.. கலாய்க்கு உள்ளான எஸ்.கே 21 ப்ரோமோ…

Sivakarthikeyan : மாவீரன், அயலான் போன்ற சூப்பர் ஹீரோ கதைகளை கொண்ட திரைப்படத்தில் நடித்த பிறகு தற்சமயம் சிவகார்த்திகேயன் ஒரு சீரியசான திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது 21 ஆம் திரைப்படமான இந்த திரைப்படம் வழக்கமான சிவகார்த்திகேயன் திரைப்படம் போல் இருக்காது என்று கூறப்படுகிறது.

வழக்கமாக சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த இருபது திரைப்படங்களிலும் காமெடி கதாநாயகனாகதான் நடித்திருந்தார். அவரது திரைப்படங்களில் காமெடி காட்சிகள் இல்லாமல் இருக்காது டான் திரைப்படத்தில் கூட சிவகார்த்திகேயன் சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் படத்தில் காமெடி என்பது இருந்து கொண்டு தான் இருந்தது.

Sivakarthikeyan-2
Sivakarthikeyan-2
Social Media Bar

இந்த நிலையில் தற்சமயம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் முழுக்க முழுக்க சீரியஸான ஒரு கதையில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் கதைப்படி அவர் ஒரு ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. மேலும் தற்சமயம் நடிகர் விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் இன்னும் கொஞ்ச நாட்களில் அவர் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த இடத்தை பிடிப்பதற்கு சிவகார்த்திகேயன் ஒரு காமெடி நடிகராக இருந்தால் சரியாக இருக்காது என்பதால் தொடர்ந்து சீரியஸான திரைப்படங்களாக நடிக்க துவங்கியிருக்கிறார். அந்த வகையில் தற்சமயம் தனது 21ஆம் திரைப்படம் குறித்து அப்டேட் ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

sivakarthikeyan
sivakarthikeyan

அதில் சிவகார்த்திகேயன் துப்பாக்கி சுடுவதற்கு பயில்வது போலவும் உடற்பயிற்சி செய்வது போலவும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. விக்ரம் திரைப்படம் படமாக்கப்பட்டபோது இதே மாதிரியான வீடியோ ஒன்று கமல்ஹாசனை வைத்து வெளியானது.

எனவே கமல்ஹாசன் தயாரிப்பில் படம் உருவாகிறது என்றாலே உடனே துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சியும் உடற்பயிற்சியும்தான் செய்வார்களா என்று இதை கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.