Tamil Cinema News
எஸ்.கே 25 படத்தின் டைட்டில் இதுதான்.. எங்க கை வச்சிருக்காரு பாருங்க..!
தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். முன்பு வளர்ந்து வரும் கதாநாயகனாக இருந்த சிவகார்த்திகேயன் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார்.
அடுத்து இவர் நடிகர் விஜய்யின் இடத்தை பிடிப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பது என்று மட்டும் இல்லாமல் படங்களை தயாரிப்பது என பல விஷயங்களை செய்தார்.
அதன் மூலமாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்கு சீம ராஜா, பிரின்ஸ் மாதிரியான படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் இப்போது வந்த அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து நல்ல இயக்குனர்களின் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்சமயம் இவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடிகர் ஜெயம் ரவி, அதர்வா போன்றோரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலும் பழைய படங்களின் பெயர்களைதான் மீண்டும் சிவகார்த்திகேயன் அவரது படங்களில் அதிகமாக வைத்துக்கொள்வார்.
காக்கி சட்டை, டான், மாவீரன், அமரன், எதிர்நீச்சல் போன்ற படங்களின் டைட்டில்கள் எல்லாமே ஏற்கனவே தமிழில் வந்த படங்களின் டைட்டில்கள் ஆகும். இந்த நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சிவாஜி கணேசனின் முதல் படத்தின் பெயரை வைக்கிறார்களே அந்த அளவிற்கான நடிப்பை எஸ்.கே வெளிப்படுத்துவாரா? என இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.
