News
பார்ப்பதற்கு அப்பாவில் போல் இருக்கும் இவர்தான் – இயக்குனரை வச்சு செய்த சிவகார்த்திகேயன்
தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்கள் எல்லாம் பெரிய ஹீரோக்கள் படங்களாகதான் இருக்கும். ஆனால் இந்த முறை வித்தியாசமாக வளர்ந்து வரும் கதாநாயகர்களின் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி நடித்த சர்தாரும், சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸும் வெளியாகின. பிரின்ஸ் திரைப்படம் மக்களிடையே அதிக எதிர்மறையான கருத்துக்களை பெற்றாலும் கூட இப்போது வரை நல்ல விதத்தில் வசூல் பெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவியில் நம்ம வீட்டு பிரின்ஸ் என்கிற நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. அதில் பிரின்ஸ் படத்தின் இயக்குனர் அனுதீப்பிடம் என்ன படித்திருக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. உடனே அவர் சார்டட் அக்கவுண்ட் என கூறினார்.
இதை கேட்டு சிரித்த சிவகார்த்திகேயன். அவர் ஒவ்வொரு பேட்டியிலும் ஒவ்வொரு படிப்பு படித்திருப்பதாக கூறுவார் என கூறினார்.
வீடியோவை காண க்ளிக் செய்யவும்
