எவ்வளவு சாமர்த்தியமா ஏமாத்தி இருக்கேன் பாருங்க..! பெப்ஸி உமாவிடம் மனம் பகிர்ந்த சிவக்குமார்.!
தமிழ் சினிமாவில் நல்ல பெயர் கொண்ட நடிகர்களில் சிவகுமார் மிக முக்கியமானவர் சிவகுமாரும் நடிகர் ஜெய்சங்கரும், தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் அவர்களுக்கென்று ஒரு ரசிக பட்டாளம் இருந்தது.
முக்கியமாக பெண்கள் மத்தியில் அவர்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது அதுவரை பிரபலமாக இருந்த சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் வயதானவர்கள் ஆகிவிட்டனர்.
இந்த நிலையில் இளம் நடிகர்களாக வந்த இவர்கள் மீது நிறைய பெண்களுக்கு ஆசை இருந்தது. ஆனாலும் கூட இவர்கள் இருவருமே பெண்கள் விஷயத்தில் மிக ஒழுக்கமாக இருந்த நடிகர்கள் என்று பெயர் வாங்கியவர்கள்.

அதிலும் சிவக்குமார் காதல் திருமணம் கூட செய்யாமல் வீட்டில் பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார். அந்த அளவிற்கு ஒரு ஒழுக்கமான நபராக அனைவராலும் அறியப்படுபவர்.
இந்த நிலையில் ஒருமுறை பெப்சி உமாவுடன் சிவகுமார் பேட்டியில் பேசியிருந்தார். அப்பொழுது பெப்சி உமா அவரிடம் எப்படி இவ்வளவு நல்லவராக இருக்கிறீர்கள் திரை துறையில் ஒழுக்கமான நபர் என்று பெயரை வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.
அதை இவ்வளவு எளிதாக வாங்கி இருக்கிறீர்களே என்று கேட்டிருக்கிறார் அதற்கு பதில் அளித்த சிவகுமார் எவ்வளவு சாமர்த்தியமா எல்லாரும் ஏமாற்றி இருக்கேன் பாருங்க என்று நகைச்சுவையாக கூறி இருக்கிறார் அந்த வீடியோ இப்பொழுது கொஞ்சம் வைரல் ஆகி வருகிறது