News
என்னை நானே செருப்பால அடிச்சிக்கிட்டதுக்கு இதுதான் காரணம்.. மனம் உடைந்த சிவக்குமார்.. ஓப்பன் டாக்.!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த பல நடிகர்களும் அதன் பிறகு குறிப்பிட்ட சில படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருவார்கள்.
ஆனால் மற்ற நடிகர்கள் இதற்கு விதிவிலக்கு தான். காரணம் ஆரம்பத்தில் எவ்வாறு முன்னணி நடிகராக இருந்தார்களோ தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தான் உண்டு, தன் வேலை உண்டு என எந்த ஒரு கிசு கிசுவிலும், சர்ச்சையிலும் சிக்காத நடிகர் என்றால் அவர் சிவகுமார் தான். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக கூறினால் இவர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி அகியோரின் அப்பா ஆவார்.
தற்போது இவர் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம் பற்றி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகுமார்
கோயம்புத்தூரில் பிறந்த சிவகுமார் மேடைப் பேச்சாளராவார் .கம்பராமாயணம், மகாபாரதம், திருக்குறள் ஆகிய சிறந்த சொற்பொழிவுகளை நடத்தி இருக்கிறார். இவர் சினிமாவில் நான்கு தலைமுறைகளாக முன்னணி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்தார். சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை, உயர்ந்த மனிதன், சிந்து பைரவி, அக்னி சாட்சி மற்றும் பல படங்களில் நடித்து புகழடைந்தார்.
இவர் மூன்று தலைமுறைகளில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், மோகன், அஜித் குமார், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்து பிரபலம் அடைந்தார்.
அதன் பிறகு தமிழ் சீரியல்களில் நடித்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சிவக்குமார் சமீப காலங்களாக எந்த ஒரு சீரியல்களிலும்,படங்களிலும் நடிப்பதில்லை. அதற்கான காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம்
படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சிவகுமார் சித்தி மற்றும் அண்ணாமலை ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது பல நடிகர்களும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் படங்களில் கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தங்களை பிஸியாக வைத்துக் கொள்வார்கள்.
ஆனால் சிவக்குமார் நடிப்பே வேண்டாம் என ஒதுங்கியதற்கான காரணம் என்னவென்றால், சித்தி என்ற சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது அதில் சிவாஜி கணேசன் போல் மிகவும் ஃபீல் பண்ணி நடித்துக் கொண்டிருந்தார்.

இதற்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்ட சிவக்குமார், அந்த காட்சிக்காக மிகவும் எமோஷனலாக நடித்தார். அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த சக நடிகை ஒருவர், அலட்சியமாக சிரித்துக் கொண்டிருந்தார். அது சிவகுமாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
மேலும் அவர் ஆரம்பத்தில் சினிமாவிற்குள் தான் வந்தபோதும், இப்போது இருக்கும் சினிமாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக உணர்ந்த இவர் தன்னை செருப்பால் அடித்துக் கொண்டு இனி நடிக்கவே கூடாது என முடிவெடுத்ததாக தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
