கதை தேர்ந்தெடுப்பதில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறார். நல்ல கதையாக இருந்தால் மக்கள் யார் கதாநாயகன் என்று கூட பார்ப்பதில்லை. அந்த திரைப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுமே கூட கதைகளை தேர்ந்தெடுப்பதில் தனித்துவம் காட்டி வருகிறார்.
அடுத்து அவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள மதராஸி திரைப்படத்தின் கதை அமைப்பும் கூட வித்தியாசமானது. அதே போல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கும் பராசக்தி திரைப்படமும் சுவாஸ்ரயமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து ஒரு காமெடி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஏனெனில் அவருக்கென்று சிறுவர் ரசிக பட்டாளம் ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் ராஜ குமாரன் ஒரு பேட்டியில் பேசும்போது அவரிடம் சூர்ய வம்சம் 2 எடுக்க வேண்டும் என்றால் யாரை வைத்து எடுப்பீர்கள் என கேட்டனர்.
ஏனெனில் அந்த திரைப்படத்தில் ராஜகுமாரன் உதவி இயக்குனராக பணிப்புரிந்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறும்போது இப்போது எடுத்தால் சிவகார்த்திகேயனைதான் கதாநாயகன் ஆக்க வேண்டும். படத்தில் வரும் அந்த சின்ராசுவின் மகன் தான் சிவகார்த்திகேயன் என கதையை துவங்க வேண்டியதுதான் என கூறியிருந்தார்.
சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை மாதிரியான குடும்ப கதைகளை கொண்ட படங்களில் நடிப்பதால் அவர் ஒருவேளை இந்த கதை அம்சத்தில் நடிப்பதற்கும் வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.






