Solluvathellam unmai lawarance: சமூக வலைத்தளங்களில் திடீர் திடீரென சில விஷயங்கள் ட்ரெண்டிங் ஆகும். சில சமயங்களில் நீயா நானாவில் வரும் விவாதங்கள், தமிழா தமிழா போன்ற நிகழ்ச்சிகளில் வரும் காட்சிகள் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வரும்.
அப்படியாக தற்சமயம் சீ தமிழில் ஒளிப்பரப்பாகிய சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஒரு எபிசோடு மிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது. லாரன்ஸ் மற்றும் கண்ணன் என்கிற இருவருக்கிடையே நடக்கும் விவாதத்தில் லாரன்ஸ் பேசிய வசனங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
அதில் இது நடிப்பு மேடம் போன்ற வசனங்களை அனுதினமும் நெட்டிசன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
யார் இந்த லாரன்ஸ்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிப்புரிந்தவர்தான் லாரன்ஸ். இவர் ஒரு கிருஸ்துவ பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணின் அக்காவை கண்ணன் என்பவர் திருமணம் செய்திருந்தார்.

கண்ணன் அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்த நிலையில் அந்த அக்காவிற்கும் லார்னஸிற்கும் இடையே தொடர்பானது. இது தொடர்பாக அவர்கள் சொல்லுவதெல்லாம் உண்மை தொடரில் பங்கேற்றனர்.
லாரன்ஸ் எங்கே?
லாரன்ஸ் பிரபலமானதை அடுத்து அவரை பேட்டி எடுக்கலாம் என கோயம்பேடு மார்க்கெட் பக்கம் சென்றுள்ளனர் பத்திரிக்கையாளர்கள். ஆனால் லாரன்ஸ் அங்கு இல்லை. அங்கு சென்ற போதுதான் அவரது நிஜ பெயர் விருமாண்டி என்பது தெரிந்துள்ளது.
கொரோனா பிரச்சனைக்கு பிறகு யாருமே லாரன்ஸை பார்க்கவில்லை என்று கூறி வருகின்றனர். இதனையடுத்து பல யூ ட்யூப் சேனல்களுமே லாரன்ஸை தேடி வருகின்றனர்.