Connect with us

லோகேஷ் கூட்டணியில் சூரி.. மாஸ் அப்டேட்டா இருக்கே..!

Tamil Cinema News

லோகேஷ் கூட்டணியில் சூரி.. மாஸ் அப்டேட்டா இருக்கே..!

Social Media Bar

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பெரிய பெரிய நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

இன்னும் சில வருடங்களில் அவர் இயக்காத பெரிய நடிகர்களை இருக்க மாட்டார்கள் என்று கூறலாம். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.

அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சின்ன பட்ஜெட்டில் புது இயக்குனர்களுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

lokesh kanagaraj

lokesh kanagaraj

இந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக அதிக பட கதைகள் வருவதாக சூரியே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறும் பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு என்றும் கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தில் அது நிறைவேறும் என்றும் சூரி கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த கூட்டணி எப்பொழுது சாத்தியப்படும் என்று மக்கள் எதிர்பார்க்க துவங்கியிருக்கின்றனர்.

To Top