News
விடுதலை 2 ரிலீஸ் தேதி எப்போ?.. ஒரு வழியாக வாய் திறந்த நடிகர் சூரி..
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புகளுக்காக போராடி வந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக அறிமுகமானவர் நடிகர் சூரி.

ஆரம்பத்தில் சூரி நடிக்கும் காமெடிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் இருந்து வந்தன. அதனை தொடர்ந்து காமெடியனாக நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் சூரி.
சினிமாவில் வரவேற்பு:
மனம் கொத்தி பறவை திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் காமெடியனாக நடித்து வந்தார் சூரி அது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்ததால் தொடர்ந்து ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று சிவகார்த்திகேயனுடன் காம்போவாக நடித்து வந்தார் சூரி.
இந்த நிலையில் அவருக்குள் இருக்கும் ஒரு சிறப்பான நடிகரை வெளியே கொண்டு வந்தததில் இயக்குனர் வெற்றிமாறன்தான் முக்கியமானவர். முக்கியமாக விடுதலை திரைப்படத்தில் போலீசாக நடித்தார் சூரி.
அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து மக்கள் சூரியை கதாநாயகனாக ஏற்றுக் கொண்டனர். விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் முடிந்த நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்பது பலருக்கு கேள்வி இருந்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சூரி கூறும் பொழுது வருகிற ஆகஸ்ட் மாதம் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே உலக திரைப்பட விழாக்களில் விடுதலை திரைப்படம் திரையிடப்பட்டிருக்கின்றது ஆனால் இன்னும் தமிழ்நாட்டில் வெளியாகாமல் இருக்கிறது.
