கூலி படத்துக்காக 7 படத்தை வேணாம்னு சொல்லிட்டார்… ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!

தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி.

லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்குவதால் இந்த படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. ஏனெனில் இப்பொழுது தமிழ் சினிமாவில் சிறப்பான ஆக்ஷன் திரைப்படத்தை எடுக்கும் ஒரு கமர்ஷியல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் பார்க்கப்படுகிறார்.

அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் கூலி. கண்டிப்பாக அந்த படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் மற்ற மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர்.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்பொழுது ரஜினி திரைப்படம் என்பதால் இந்த படத்திற்காக நிறைய வாய்ப்புகளை விட்டுவிட்டு வந்து நடித்து வருகின்றனர் நடிகர்கள்.

Social Media Bar

உதாரணத்திற்கு கேரள நடிகரான சோபின் சாகிர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ஏழு படங்களின் வாய்ப்பை விட்டுவிட்டு தான் அவர் வந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இதே மாதிரி இன்னும் நிறைய நடிகர்கள் இந்த திரைப்படத்திற்காக வாய்ப்புகளை விட்டு வந்து நடித்திருக்கின்றனர். எனவே கூலி திரைப்படத்தின் வெற்றி இவர்கள் அனைவருக்குமே முக்கியமான வெற்றி ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.