Tamil Cinema News
ஓட்டு போடுறவன் எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கணும்.. விஜய்க்கு ஆதரவாக ரசிகன் பேசிய ப்ளாஸ்ட் ஸ்பீச்..!
சமீபத்தில் விகடன் வெளியிட்ட எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்கிற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொண்டார்.
அதில் விஜய் கலந்து கொண்டதில் அதிக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன விஜய் எப்படி அதில் கலந்து கொள்ளலாம். அவருக்கு அம்பேத்கரை பற்றி என்ன தெரியும் முக்கியமாக தொல். திருமாவளவன் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக விஜய் கலந்து கொண்டது சரி கிடையாது என்பது பலரது வாதமாக இருந்தது.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகரும், நடிகர் விஜயின் ரசிகரமான சௌந்தரராஜன் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எவ்வளவோ முற்போக்கு கட்சிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறுகிறார்கள்.
எல்லோருக்கும் உரிமை உண்டு:
ஆனால் அதில் வெற்றி அடைந்து வந்த எந்த ஒரு முற்போக்கு கட்சியும் அம்பேத்கரை தனது கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக் கொண்டவர் நடிகர் விஜய்தான். ஒரு நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என்று பலரும் பேசுகின்றனர்.
ஆனால் எவ்வளவோ எவ்வளவோ நடிகர்கள் இதுவரை அரசியலுக்கு வந்து சாதனை செய்திருக்கின்றனர். நடிகை ஜெயலலிதா நடிகர் எம்.ஜி.ஆர் கலைஞர் மு கருணாநிதி கூட அரசியலுக்கு வருவதற்கு முன்பு திரைத்துறையில் தான் பணிபுரிந்து வந்தார்.
அதையும் தாண்டி இந்தியாவில் ஓட்டு போடும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் முதலமைச்சர் ஆவதற்கான தகுதி உண்டு. அவர்கள் அதற்கு ஆசையும் படலாம். அதில் எந்த தவறும் கிடையாது.
அப்படி இருக்கும்பொழுது தனக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் ஆசைப்படக்கூடாது என்று யாரும் கூற முடியாது என்று பேசியிருந்தார் சௌந்தர்ராஜன். இவரது இந்த பேச்சுக்கு ஆதரவாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்