Bigg Boss Tamil
சின்ன வயசுல கடைல திருடுவேன்.. சௌந்தர்யாவின் சின்ன வயசு க்யூட் கதை..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் போட்டியாளர்களில் இப்பொழுது மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றவராக நடிகை சௌந்தர்யா இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த சௌந்தர்யாவிற்கு பிறகு ஆகா ஓடிடியில் வெளியான வேற மாதிரி ஆபீஸ் என்கிற வெப்சீரிஸில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியஸில் லீனா என்கிற அவரது கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
சின்ன வயசுல கடைல திருடுவேன்
அதனை தொடர்ந்து சௌந்தர்யா நஞ்சுண்டன் பிரபலமான ஒருவராக மாறினார். தற்சமயம் பிக்பாஸிலும் அவருக்கு அதன் மூலமாக வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பிக் பாஸில் கலந்து கொண்டு வரும் சௌந்தர்யா சமீபத்தில் தன்னுடைய சிறுவயது கதையை கூறியிருந்தார்.
அதை கேட்கவே சுவாரஸ்யமாக இருந்தது சௌந்தர்யாவின் தந்தை சென்னையில் பேக்கரி வைத்திருக்கிறார். சௌந்தர்யா சிறுவயதாக இருக்கும் பொழுது அந்த பேக்கரியில் வேலை பார்ப்பாராம். அதற்காக அவரது தந்தை தினமும் 500 ரூபாய் கொடுப்பாராம்.
க்யூட் கதை
இதனை கேட்டு பிக்பாஸ் போட்டியில் இருக்கும் மற்ற பெண்களை எல்லாம் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஐந்தாவது ஆறாவது படிக்கும் பொழுதே தினமும் 500 ரூபாய் சம்பளமாக வாங்குவாயா என்று கேட்டிருக்கின்றனர் அதற்கு சௌந்தர்யா நான் காலையிலிருந்து நைட்டு வரை நின்னு வேலை பார்ப்பேன்.
அதற்காக எனக்கு கொடுப்பார் என்று கூறி இருக்கிறார். மேலும் அங்கு இருக்கும் இனிப்புகளை எல்லாம் திருடி தின்று விடுவேன். பள்ளிகளுக்கு செல்லும் பொழுது எனக்கு எங்க அப்பா நிறைய சுவீட்ஸ் கொடுப்பார் அதை நான் எடுத்துக் கொண்டு செல்வேன். என்னிடம் பேசாத பெண்கள் கூட அந்த ஸ்வீட்டை வாங்கி தின்பதற்காக வந்து பேசுவார்கள் என்று குழந்தை தனமாக பேசியிருந்தார் சௌந்தர்யா.