Cinema History
எப்போதும் லேட்டு!.. அந்த காலத்தில் சிம்புவுக்கே டஃப் கொடுத்த நடிகர்!.. தவறை உணர்த்த பலிக்கு பலி வாங்கிய இயக்குனர்!..
SP muthuraman: தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.பி முத்துராமன். எஸ். பி முத்துராமன் ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் முதலே படம் இயக்கி வந்தார். அப்போது நடிகர் ரங்காராவ் எல்லா படப்பிடிப்புக்கும் தாமதமாக வருவது, அப்படியே வந்தாலும் சில காட்சிகள் மட்டும் நடித்துக்கொடுத்துவிட்டு சென்றுவிடுவது என இருந்திருக்கிறார்.

இதனால் எஸ்.பி.எம்மும் கூட பலமுறை அவதிப்பட்டிருக்கிறார். இந்த செயலால் அவர் மீது அதிருப்தியில் இருந்தார் எஸ்.பி.எம். இந்நிலையில் ரங்காராவே தயாரிக்க தெலுங்கு நடிகர் என்.டி.ஆர் மற்றும் சாவித்திரி கூட்டணியில் நானும் ஒரு பெண் என்கிற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கும் வாய்ப்பு எஸ்.பி.எம் மிற்கு கிடைத்தது. இதுதான் பழி வாங்குவதற்கு சரியான நேரம் என நினைத்த எஸ்.பி.எம் ஒரு வேளை செய்தார்.
அப்போது என்.டி.ஆரிடம் நாட்கள் கிடைப்பது கடுமையான விஷயம். 10 நாட்கள்தான் என்.டி.ஆர் கால்ஷீட் கொடுத்திருந்தார். அதற்கு பிறகு திரும்ப அவர் கால்ஷீட் தர 6 அல்லது 7 மாதங்கள் ஆகும். இந்த நிலையில் சாவித்திரியை அழைத்து ரங்காராவிடம் “எனக்கு 5 நாள்தான் கால்ஷீட் தர முடியும். எனக்கு அடுத்த படத்தில் வேலையிருக்கு” என கூறுமாறு கூறினார்.

அதை புரிந்துக்கொண்ட சாவித்திரியும் அதே மாதிரி செய்ய தலையில் துண்டை போட்டுக்கொண்டு அமர்ந்தார் ரங்காராவ். ஒரு கால்ஷீட்ல இவ்வளவு விஷயம் இருப்பது தெரியாமல் பல படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக செல்லாமல் நாம் செய்த பிரச்சனை.
இப்போது நம் தலையிலேயே விழுந்துள்ளது என மனம் வருந்தினார் ரங்காராவ். அவர் தவறை உணர்ந்ததை அறிந்த எஸ்.பி.எம் “சார் நான் சாவித்திரி அடுத்து நடிக்கவிருக்கும் பட நிறுவனத்திடம் பேசி டேட்ஸை வாங்கிவிட்டேன்” என கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
அந்த நிகழ்வுக்கு பிறகு எந்த ஒரு படப்பிடிப்புக்குமே ரங்காராவ் தாமதமாக செல்வதில்லையாம்.
