Connect with us

ஆயிரம் நிலவே வா பாடல் எஸ்.பி.பியோட முதல் பாட்டு கிடையாது!. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!..

Cinema History

ஆயிரம் நிலவே வா பாடல் எஸ்.பி.பியோட முதல் பாட்டு கிடையாது!. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள பாடகர்களில் என்றென்றும் மற்றவர் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடகர்களில் முக்கியமானவர் எஸ்.பி பாலசுப்ரமணியம். சினிமாவிற்கு அறிமுகமான காலக்கட்டம் முதல் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கு அவரது குரலால் சினிமாவை அழகாக்கினார் என கூறலாம்.

முக்கியமாக ரஜினியின் பல படங்களுக்கு இவர்தான் பாடல்கள் பாடியிருப்பார். பொதுவாக எஸ்.பி.பியின் முதல் பாடல் குறித்து பல கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றன. அதில் பெரும்பாலோனோர் கூறுவது அடிமை பெண் படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா பாடல்தான் எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் என்பதாகும்.

ஆனால் அது தவறு அடிமை பெண் திரைப்படம் 1983 இல் வெளியான படமாகும். ஆனால் எஸ்.பி.பி அதற்கு முன்னரே 1960 களிலேயே தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு வாய்ப்பு தேடி வந்தார்.

பல வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் இருந்தப்போது அப்போது இருந்த இயக்குனர் வைகுந்த ராம சாஸ்திரி இயக்கிய சாந்தி நிலையம் என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக பாடுவதற்கு வாய்ப்பை பெற்றார் எஸ்.பி.பி.

அந்த படத்தில் அவர் பாடிய இயற்கை என்னும் என்கிற பாடல்தான் எஸ்.பி.பி தமிழில் பாடிய முதல் பாடலாகும். இதை அவரே பழைய நேர்க்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

To Top