Latest News
அம்பானியின் திருமணத்தில் அத்துமீறிய ஸ்ரீ தேவி மகள்!.. காதலருடன் செய்த விஷயம்..
நடிகை ஸ்ரீ தேவிக்கு தமிழ் சினிமா பிறந்த இடம் என்றால் பாலிவுட் புகுந்த வீடு என கூறலாம். தமிழ் சினிமாவில் வரிசையாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பை பெற்ற ஸ்ரீதேவி அதனை தொடர்ந்து பாலிவுட் சினிமாவிலும் வாய்ப்பை பெற்றார்.
அந்த காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவை விடவும் வளர்ந்த துறையாக பாலிவுட் சினிமா இருந்து வந்தது. அப்போதைய காலகட்டத்தில் பாலிவுட் சினிமா அளவிற்கு தமிழ் சினிமா வளர்ந்திருக்கவில்லை. அப்போது நடிகர்களுக்கு கேரவன் வசதி கூட தமிழ் சினிமாவில் செய்து தரப்படாமல் இருந்தது.
நடிகைகள் படப்பிடிப்பு தளங்களில் உடை மாற்ற வேண்டும் என்றால் கூட அவர்களை சுற்றி துணியை கட்டி அதில்தான் உடை மாற்ற விடுவார்கள் ஆனால் அந்த சமயத்திலேயே பாலிவுட்டில் கேரவன் வசதி இருந்தது.
ஸ்ரீ தேவிக்கு கிடைத்த வாய்ப்பு:
இவை எல்லாம் தமிழ் சினிமாவில் மிக தாமதமாகதான் வந்தது. அப்போது தமிழ் சினிமா வளர்ந்து வந்த சினிமாவாக இருந்தது. தமிழ் சினிமா நடிகர்கள் பலருமே அப்பொழுது பாலிவுட்டில் நடிக்க நினைத்தனர். இந்த நிலையில்தான் ஸ்ரீதேவி பாலிவுட்டில் சேர்ந்து பிரபலமானார்.
இந்த நிலையில் பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரையே அவர் திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரும் வட இந்தியாவிலேயே வளர்ந்தவர் என்பதால் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் தான் வாய்ப்புகளை பெற்றார்.
அங்கு வெற்றிகரமாக ஒரு கதாநாயகியாகவும் இருந்து வருகிறார் ஜான்வி கபூர். இந்த நிலையில் சமீபத்தில் இந்தியாவின் பிரபல தொழிலதிபரான அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் இடையே திருமணம் நடப்பதற்கான ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் சொகுசு கப்பலில் நடைபெற்றது.
இதற்கு பல முக்கிய புள்ளிகள் வந்திருந்தனர். அந்த வகையில் இந்த விழாவிற்கு ஜான்வி கபூரும் வந்திருந்தார். அவர் தனது காதலர் சிஹர் பகாரியாவையும் இந்த திருமணத்திற்கு அழைத்துக் கொண்டு திருமணத்திற்கு வந்தார். அங்கு அவர் தன்னுடைய காதலருக்கு உணவு ஊட்டி விடும் காட்சியானது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்