அவ்வளவு செஞ்ச எங்க அப்பாவை ஜெயலலிதா மறந்துட்டாங்க!.. ஓப்பன் டாக் கொடுத்த ஸ்ரீதர் மகன்!.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்திலேயே வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஸ்ரீதர். நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான் ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர்தான்.

முதன் முதலாக வெண்ணிற ஆடை என்கிற திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கினார் ஸ்ரீதர். ஆனால் அப்படிப்பட்ட ஸ்ரீதரையே ஜெயலலிதா மறந்துவிட்டார் என  தனது பேட்டியில் கூறியுள்ளார் ஸ்ரீதர் மகன்.

அவர் கூறும்போது முதலில் ஸ்ரீதருடன் ஜெயலலிதாவுக்கு சுமூகமான உறவுதான் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் வளர்ந்த பிறகு எங்களுடன் அவ்வளவாக தொடர்பில் இல்லை. இந்த நிலையில் ஒரு முறை எனது தந்தைக்கு உடல் நலமில்லாமல் போய் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

sridhar
sridhar
Social Media Bar

அப்போதைய சமயத்தில் பல திரைப்பிரபலங்கள் என் தந்தையை நலம் விசாரித்து சென்றனர். ஆனால் ஜெயலலிதா மட்டும் வந்து பார்க்கவில்லை. இந்த நிலையில் பத்திரிக்கைகள் ஜெயலலிதா நன்றி மறந்துவிட்டதாக எழுதிவிட்டன. இது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.

அதற்கு பிறகு அவர் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை. மேலும் திரைப்பட நூற்றாண்டு விழா நடந்தப்போது இயக்குனர் ஸ்ரீதரின் புகைப்படத்தை ஒரு ஓரத்தில் கூட வைக்கவில்லை. தமிழ் சினிமாவிற்காக என் அப்பா எவ்வளவு செய்திருக்கார். அவரை இப்படி புறக்கணித்ததுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு என்கிறார் ஸ்ரீதர் மகன்.