ஹாலிவுட் இருந்து வெளியாகி மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த தொடர்களில் மிகப் பிரபலமான தொடர் ஸ்ட்ரேஜர் திங்ஸ்.
நெட்ப்ளிக்ஸில் வெளியான இந்த தொடருக்கு உலக அளவில் அதிக வரவேற்பு இருந்தது. ஒரு கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் கதைகளம் அமைந்து இருக்கிறது.
இந்த கிராமத்தில் வசிக்கும் சில சிறுவர்கள் ஒரு மர்மமான பெண்ணை மீட்டு கொண்டு வருகின்றனர். அந்த பெண்ணுக்கு ஆசாத்தியமான சக்திகள் இருக்கிறது.
அதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது கிராமத்தில் இருக்கும் ஒரு ஆய்வு கூடத்தில் சிறுவர்களை வைத்து சட்டத்திற்கு புறம்பாக சில சோதனைகளை செய்திருக்கின்றனர்.
அதன் மூலம் ஒவ்வொரு சிறுவர்களும் ஒவ்வொரு வகையான சக்தியை பெறுகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் Stranger things கதைகளம் அமைந்து இருக்கிறது.
இந்த நிலையில் இதன் இறுதி பாகம் தற்சமயம் வழியாக இருக்கிறது இந்த நிலையில் இதன் ட்ரைலரை தற்சமயம் வெளியிட்டு இருக்கின்றனர் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.
 
			 
			








