Connect with us

உடலை அறுத்துக்கொண்டும் வெளி வரும் உருவம்.. உலக அளவில் வரவேற்பை பெற்ற சப்ஸ்டென்ஸ்.. கதை என்ன?

Movie Reviews

உடலை அறுத்துக்கொண்டும் வெளி வரும் உருவம்.. உலக அளவில் வரவேற்பை பெற்ற சப்ஸ்டென்ஸ்.. கதை என்ன?

Social Media Bar

இளமையும் அதனால் கிடைக்கும் அழகும் பலருக்குமே எப்போதுமே தக்க வைத்து கொள்ள ஆசைப்படும் விஷயமாகவே இருக்கின்றன. யாருமே இங்கு முதுமையை விரும்புவதே கிடையாது. முதுமையில் ஏற்படும் நரை, முக சுருக்கங்களை கூட மறைக்கவே நினைக்கிறோம்.

ஏனெனில் வசீகரம் என்பதும் அந்த வசீகரத்துக்கு கிடைக்கும் வரவேற்பும் இளமையில் மட்டுமே நிகழ்கிறது. மிகவும் புகழ் பெற்ற பிரபலம் ஒருவர் முதுமையடைந்த பிறகு தன்னுடைய பிரபலத்தை இழக்கிறார். மீண்டும் அந்த பிரபலத்தை அடைய அவர் செய்யும் முயற்சிகளே சப்ஸ்டென்ஸ் திரைப்படத்தின் கதையாக இருக்கிறது.

தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளின்போது எலிசபெத் ஸ்பார்க்கில் என்பவர் டிவியில் ஒரு விளம்பரத்தை பார்க்கிறார். உங்களுடைய இளமையை திரும்ப பெற இந்த மருந்தை எடுத்துக்கொள்ளவும் என ஒரு விளம்பரம் வருகிறது. அதனை தொடர்ந்து அந்த மருந்தை வாங்கி அவர் உட் செலுத்தி கொள்கிறார்.

அதனை தொடர்ந்து அவரது முதுகை கிழித்துக்கொண்டு அவருடைய இளமை பருவ பெண் வெளியே வருகிறாள். 7 நாட்கள் மட்டுமே அவள் வெளியில் உலாவ முடியும். அடுத்த 7 நாட்களுக்கு அந்த வயதான எலிசபெத் தான் வெளியில் உலாவ முடியும்.

ஏனெனில் வயதான எலிசபெத் உடலில் சுரக்கும் திரவத்தை வைத்துதான் இளமையான எலிசபெத்தால் உயிர்வாழ முடியும். ஒரு தடவைக்கு 7 நாட்களுக்கு உள்ள திரவத்தை மட்டுமே வயதான எலிசபெத்திடம் இருந்து எடுக்க வேண்டும். அதற்கு அதிகமாக எடுத்தால் அவளது வயது இன்னமும் அதிகமாகிவிடும்.

இந்த நிலையில் தொடர்ந்து இந்த இரண்டு எலிசபெத்களும் உடல் ரீதியாக செய்துக்கொள்ளும் விஷயங்கள் மனதை பாதிப்பதாக இருக்கின்றன. இந்த படத்தை 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

இளம் உடல்களின் மீது இருக்கும் வர்த்தகத்தையும் மக்களுக்கு அதன் மீது இருக்கும் மோகத்தையும் வெளிப்படையாக பேசியதால் சப்ஸ்டென்ஸ் திரைப்படத்திற்கு உலக அளவில் நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top