News
மறுபடியும் கில்லியை ரீ க்ரியேட் பண்ணியாச்சு! – வைரலாகும் பாடல்கள்!
நடிகர் விஜய் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் கில்லி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார்.

த்ரிஷாவும் கூட அப்போதுதான் சினிமாவிற்கு வந்திருந்தார் என்பதால் அவருக்கும் இது முக்கியமான திரைப்படமாக அமைந்தது. கில்லி வந்த காலத்தில் அதன் பாடல்களை கேட்காதவர்கள் இருக்க முடியாது.
இந்த நிலையில் தற்சமயம் சன் மியூசிக் கில்லி படத்தின் பாடல்களை ரி க்ரியேட் செய்து வருகிறது. தற்சமயம் உள்ள புல் ஹெச் எடி தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இந்த பாடல்களை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.
கில்லி படத்தின் வரும் அனைத்து பாடல்களையுமே ஒவ்வொன்றாக தனது யூ ட்யூப் சேனலி வெளியிட்டு வருகிறது சன் மியுசிக். இந்த பாடல்கள் அனைத்தும் லட்சக்கணக்கான வீவ்களை பெற்று ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
