அஜித்தை கூட்டி வறது என் பொறுப்பு! வாக்கு குடுத்த சிறுத்தை சிவா!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருப்பவர் அஜித். சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர பைக் பயணத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித். சமீபத்தில் துணிவு பட ஷூட்டிங்கிற்கு நடுவே லடாக்கிற்கு பைக் பயணம் மேற்கொண்டார்.

Social Media Bar

தற்போது துணிவு படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் திரையுலகில் 62 படங்கள் நடித்ததை சிறப்பிக்கும் விதமாக 62 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார் அஜித்.

அதேசமயம் அடுத்தடுத்து அஜித்தை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்திருக்கின்றனர்.

நீண்ட நாளாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித்தை வைத்து படம் தயாரிக்க பேசி வருகிறதாம். சமீபமாக சிறுத்தை சிவா அஜித்தை வைத்து மற்றொரு படத்தை இயக்க கதை ஒன்றை தயார் செய்து வருகிறாராம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே பலமுறை சன் பிக்சர்ஸ் தனது தயாரிப்பில் அஜித்தை நடிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லையாம். இந்நிலையில் சிறுத்தை சிவா அஜித்திடம் பேசி சம்மதிக்க வைப்பதாக கூறியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

எப்படியிருந்தாலும் தனது 62 நாட்டு பயணத்தை முடித்த பின்னே அஜித் இந்த படம் குறித்து ஆலோசிப்பார் என்று பேசிக் கொள்ளப்படுகிறது.